மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்
மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், பக். 160, விலை 80ரூ
உயிரின உறுப்புகளின் மிகப் பிரதானப் படைப்பே அவற்றின் மூளையாகும். பிற உறுப்புகள் எல்லாம் தங்களது இயக்கத்தை வெளிக்காட்டும்போது, மூளை மட்டும் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருந்துகொண்டே, உடலின் அனைத்து உறப்புகளையும், நொடிப் பொழுதில் இயக்கும் ஆற்றல் படைத்தது.
தவிர, எண்ணங்களும், சிந்தனைகளும் கூட மூளையில்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே உயிரினங்களின் அறிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஆறு அறிவு கொண்ட மனித இனத்தின் மூளையைப் போன்ற ஒரு உன்னதமான படைப்பு வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை.
பொதுவாக மூளை நலமாக, வலிமையாக இருந்தால்தான் நமது உடலும், செயல்பாடும் நலமாக இருக்கும். அத்தகைய மனித மூளையைப் பற்றிய அறிவியல் ரீதியான பல தகவல்களை இந்நூலில் ஆசிரியர் தொகுத்தளித்துள்ளார். அதாவது மனித மூளையின் வடிவமைப்பு, கட்டமைப்பு, மூளை பாதுகாக்கப்படும் விதம், மூளைக்குத் துணையாகச் செயல்படும் பிற உறுப்புகள், உடல் உறுப்புகளை மூளை இயக்கும் விதம், மூளை இயங்க முக்கியத் தேவை, மூளையைத் தாக்கும் நோயக்ளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் விதம், மூளை பாதிக்கப்பட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும் உணவு முறைகள், மூளைக்கான பயிற்சிகள்…இப்படி பல அறிவியல் ரீதியிலான தகவல்கள் எளிய தமிழ்நடையில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும், இவற்றை படித்து அறிவது நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 20/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026978.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818