ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக். 272, விலை 140ரூ.
இன்றைய அறிவியல் உலகத்தில், மனித வாழ்க்கை பரபரப்பான சூழ்நிலையோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மனித எண்ணங்கள் அனைத்தும் தன்னுடைய குடும்பம், வேலையால் வரக்கூடிய வருமானம், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும் என சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. என்ன தான் வாழ்க்கையை சிக்கனமாக ஓட்டினாலும், வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கத்தானே போகிறது என நினைப்போருக்கு இந்த நுால் ஒரு அற்புத மருந்து. இந்த நுாலில் மன அமைதியைத் தரும் நல்ல வார்த்தைகள் பல உள்ளன.
உண்மை எப்போதும் நம் எதிரிலேயே உள்ளது. நாம் தான் குருடர்களாக இருந்து கொண்டிருக்கிறோம் போன்ற ஓஷோவின் தத்துவங்கள் மனதில் நிற்பவை என்றால் அது மிகையாகாது.
– முனைவர் க.சங்கர்
நன்றி: தினமலர், 18/11/18
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000010095.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818