நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா, விலை 100ரூ. ‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர். அப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், முனைவர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி பரவசம் பெருகும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 21/5/2017.   —-   காலத்தை வென்ற ஜோதிட சித்தர்கள், கவிதா, விலை 200ரூ. ஜோதிடக் கலையின் மூலவர்கள் சித்தர்கள். சித்தர்கள் விவரித்துள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், ஆரூடம், கைரேகை சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சோதிடக் கலையைப் பற்றிய முழு விளக்கங்களை […]

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more