நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]

Read more

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ. இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன. […]

Read more

வீரம்

வீரம், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. இந்திய விடுதலை போரில், ஆண்களுக்கு நிகராக, பெண்களும், தங்கள் பங்கை செலுத்தி இருக்கின்றனர். வேலு நாச்சியார் முதல், ஜல்காரி பாய் வரையிலான, பல பெண் தியாகிகள் பற்றிய சுருக்கமான வரலாற்று நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

நாட்டை உலுக்கிய ஊழல்கள்

நாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]

Read more

பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 175ரூ. பலநூறு ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே இருக்கும் பறக்கும் தட்டு உண்மையா? வேறு கிரகங்களில் மனிதர்கள் – வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையா? பொய்யா? வேற்றுகிரகவாசிகளுடன் பேசமுடியுமா ? என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லும் விதமாக ஆதாரத்துடனும் தேவையான படங்களுடனும் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு இரவில் வெளியே வந்தால் தொலைவில் தெரியும் வெளிச்சம் பறக்கும் தட்டாகத் தோற்றமளிப்பது போன்ற பிரமை ஏற்படக்கூடும். நன்றி: குமுதம், […]

Read more

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்,   குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை. இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார். விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த […]

Read more

பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 200ரூ. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை கிடைக்காமல் இருக்கும் கேள்வி, வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, அவர்கள் பறக்கும் தட்டு மூலம் நமது உலகுக்கு வந்து செல்கிறார்களா என்பதுதான். உலகின் பல பகுதிகளிலும் பறக்கும் தட்டுக்களைப் பார்த்தவர்கள் கூறிய ஆச்சரியமான தகவல்கள், அவற்றுக்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கங்கள் ஆகியவற்றையும், வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அமெரிக்காவில் ரகசியமாக ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படும் ‘ஏரியா 51’ என்ற இடம் பற்றிய தகவல்களையும், சுவாரசியமாக தந்து இருக்கிறார், […]

Read more

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more
1 2