புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

தீரன் திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான், குன்றில்குமார், சங்கர்பதிப்பகம், விலை 190ரூ. வெள்யைர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்த மன்னர்களில் முக்கியமானவர் திப்பு சுல்தான். மனித நேயம் படைத்தவர். மத நல்லிணக்கம் கொண்டவர். எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய பெண்ணையே மணந்து, தன் நன்றியறிதலைக் காட்டியவர். பகையரசு, குடும்பப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற தன் படைத் தலைவனையே சுட்டுக்கொன்ற நீதிமான். அந்த மாவீரனின் வரலாற்றை வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் எழுதியுள்ளார், குன்றில் குமார். படிக்கும்போது, காட்சிகள் திரைப்படம் போல நம் மனக்கண் முன் ஓடுகின்றன. […]

Read more

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது, பாபநாசம் குறள்பித்தன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. எம்.ஜி.ஆர் பற்றி தாய் வார இதழில் இடம் பெற்ற 21 பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.   —- ஷீரடி பாபா, வி.ஆர்.கே. ரவிராஜ், ஸ்ரீஆனந்த நிலையம், சென்னை, விலை 70ரூ. ஸ்ரீசீரடி மகான் சாயி பாபாவை கடவுளாக பாவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு, மனிதக் கடவுளின் மகத்துவத்தை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023188.html புவியின் 460 கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண் பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு […]

Read more

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ. உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-5.html தமிழ் மன்னர்களில் பல சிறப்புகளைப் பெற்றவர் அருண்மொழி வர்மர் என்ற இயற்பெயர் கொண்ட ராஜாஜி சோழன். நிர்வாகத்தில் அறிவாற்றலைப் புகுத்தி, வீரத்தை வெற்றிகளாக்கி, உலகம் முழுவதும் சோழரின் புலிக்கொடியைப் பறக்கவிட்டு, இன்றும் விஞ்ஞானிகளையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் வியக்கச் செய்து கொண்டிருக்கும் தஞ்சை பெரிய  கோவிலின் பிரம்மாண்ட […]

Read more

முற்கால மக்கள் வரலாறு

முற்கால மக்கள் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. வரலாறு என்பது இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழி நடத்தும் வல்லமை பெற்றது. இந்நூலில் குகைவாசிகள், அகழ்வாசிகள் உள்ளிட்ட பலரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல்களும், உயரிய படிப்பினைகளும் உள்ளன. திருக்குர்ஆன் விளக்கவுரையாளரும், மார்க்க சட்ட மேதையுமான இப்னு கஸீர் (ரஹ்) அரபி மொழியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா என்ற சரித்திர நூலின் நான்காம் பாகத்தை எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ, முற்கால மக்கள் வரலாறு […]

Read more

பெரியார் களஞ்சியம் குடிஅரசு

பெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]

Read more

சாகச வீரர் சச்சின்

சாகச வீரர் சச்சின், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 100ரூ. இந்திய கிரிக்கெட் வீரர்களின் இன்று உலகப்புகழ் பெற்ற சாதனையாளராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் குன்றில்குமார். கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிராட்மேன். அவர் மனதைக் கவர்ந்தவர் டெண்டுல்கர்தான். தன்னுடைய 90வது வயது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டெண்டுல்கரை அழைத்துப் பெருமைப்படுத்தினார் பிராட்மேன். சாதனை வீரர் […]

Read more

அறியப்படாததமிழகம்

அறியப்படாததமிழகம், தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.கே,பி, சாலை, நாகர்கோவில் 629001, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-049-2.html தமிழ்நாட்டில் திருமணத்தில் இருந்து கோவில் விழாக்கள் வரை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அதுபற்றி ஆராய்ந்து, பல சுவையான தகவல்களைக் கொடுத்துள்ளார், பேராசிரியர் தொ. பரமசிவன். தென்னை மரம் பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் எவ்வித குறிப்பும் இல்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுந்த எந்த பக்தி இலக்கியத்திலும், கோவில்களில் தேங்காய் உடைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. தமிழர் திருமணத்தில் […]

Read more
1 2 3