வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more

நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]

Read more

பெரியார் களஞ்சியம் குடிஅரசு

பெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]

Read more