உலகத்தின் தோற்றமும் வரலாறும்
உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023188.html புவியின் 460 கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண் பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையிலும் தேவைப்படும் இடங்களில் எல்லாம், அதற்குரிய படங்களை தந்துள்ளது பாராட்டத்தக்கது. குரங்குகளில் இருந்து மனிதன் பரிமாற்றம் அடைந்ததை, வாலில்லா குரங்குகளில் ஏதோ ஒரு இனப்பிரிவில் பக்குவம் அடைந்த ஆண், பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட மரபணுக்கள் மாற்றத்தாலும், பரிணாம வளர்ச்சியாலும், புதுவகையான குட்டிகள் பிறந்தன. பால் தயிராக மாறுவதுபோல என, ஆசிரியர் விளக்கம் தருகிறார். கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய புவியின் வரலாற்றை, மின்னல் வேகத்தில் சுற்றிவர செய்யும் நூல் இது. -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 19/7/2015.
—-
மகான்களின் மகா அனுபவங்கள், குன்றில்குமார், வெளியிட்டோர் ராஜமாணிக்கம்மாள், சென்னை, விலை 75ரூ.
மனிதன் சுயநலம் பாராமல் பொதுநலத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உணர்த்திய மகான்களின் வாழ்வியல் நெறிகளையும், போதனைகளையும் அனுபவங்களையும் எளிய நடையில் தொகுத்தளித்திருக்கிறார் குன்றில்குமார். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.