முற்கால மக்கள் வரலாறு

முற்கால மக்கள் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5.

வரலாறு என்பது இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழி நடத்தும் வல்லமை பெற்றது. இந்நூலில் குகைவாசிகள், அகழ்வாசிகள் உள்ளிட்ட பலரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல்களும், உயரிய படிப்பினைகளும் உள்ளன. திருக்குர்ஆன் விளக்கவுரையாளரும், மார்க்க சட்ட மேதையுமான இப்னு கஸீர் (ரஹ்) அரபி மொழியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா என்ற சரித்திர நூலின் நான்காம் பாகத்தை எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ, முற்கால மக்கள் வரலாறு (இஸ்ரவேலர், அரேபியர்) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அழகிய வடிவமைப்பிலும் நூல் அமைந்துள்ளது. இந்நூலை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 250ரூ. நபிமார்கள் வரலாறு மூன்றாம் பாகத்தையும் இதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 225ரூ.  

—-

 

திருக்குறள் கவிதையில் உரை, கபிலன் பதிப்பகம், டி7, ராஜசக்தி விநாயகர் கோவில் தெரு, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 3, விலை குறளும் ரூ.90, பொருட்குறள் ரூ.120.

திருக்குறளுக்கு உரைநடையில் பல உடிரைகள் வந்துள்ளன. குறள் நெறிச் செல்வர் என்று புகழ்பெற்ற அ.சொ. சண்முகனார், திருக்குறளுக்கு கவிதையிலேயே உரை எழுதியுள்ளார். அறத்துப்பாலுக்கான உரை குறளறம் என்ற பெயரிலும், பொருட்பாலுக்கான உரை பொருட்குறள் என்ற பெயரிலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. கவிதைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன.  

—-

 

மதுரைக்கு அரசி மீனாட்சி, குன்றில்குமார், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ.

உலகம் முழுவதும் உள்ள சைவ தலங்களில் சிவபெருமானே முதன்மையானவராக இருப்பார். ஆனால் மதுரையம்பதியில் மட்டும் ஈசனின் துணைவி மீனாட்சியின் அரசாட்சியே நடைபெறுகிறது. சிறப்புமிக்க இந்த தலம் தோன்றிய வரலாறு, மீனாட்சி அம்மன் தோன்றிய கதை, ஆங்கிலேயர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சந்தித்த பிரச்சினைகள், குமரகுருபரருக்கு மீனாட்சியால் கிடைத்த பெரும் பேறு என மதுரை மீனாட்சி அம்மனின் அற்புதங்களின் தொகுப்பே இந்நூல். நன்றி:தினத்தந்தி, 31/7/2013,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *