புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்
புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ.
உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் உதவும்.
—-
நீங்களே திருமணப் பொருத்தம் பாருங்கள், வி.கே. உமாபதி ஜோதிடர், மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ.
நமக்கு நாமே எளிய முறையில் திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் நூல்.
—-
பாடி லாங்வேஜ் (உடல் மொழி), குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 45ரூ.
ஒருவர் வாய்திறந்து பேசாமலே அவர் எண்ணத்தை மன ஓட்டத்தை வெளிப்படுத்துவது பாடி லாங்வேஜ் எனப்படும் உடல் மொழி. இந்த மொழியைப் புரிந்து கொள்வதன் மூலமும், ஒவ்வொரு இடத்திலும் நாம் சரியான சமிக்ஞைகளை வெளியிடுவதன் மூலமும் நற்பலன்கள் விளையும். அதற்கு கைகொடுக்கிறது இந்த நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.