குட்டிஇளவசரன்

குட்டிஇளவசரன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, (தமிழில்: ச. மதனகல்யாணி, வெ. ஸ்ரீராம்), க்ரியா வெளியீடு இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர், மனித உலகின் அழியாத அடிப்படை குணாம்சங்களையும் அன்பின் ஆற்றலையும் கவனப்படுத்தி எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல். நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ. பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி […]

Read more

நிரபராதிகளின் காலம்

நிரபராதிகளின் காலம், ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி, க்ரியா வெளியீடு, விலை 200ரூ. நிரபராதிகளின் காலம் – நாடகத்தின் முதல் வரி இந்தத் தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ‘சமூகத்துக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; அதனால், தனிப்பட்ட எனது தலையீடு இல்லாத எதற்கும் நான் பொறுப்பில்லை’ என்றபடி உலவும் நிரபராதிகளால் இவ்வுலகம் நிரம்பியிருக்கிறது என்கிற தொனியில் இந்தத் தலைப்பு ஒலிக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் இரண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன. கொள்கைப் பிடிப்புள்ள லாஸோன் ஒரு சர்வாதிகாரியைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிடுகிறான். பிடிபட்ட புரட்சிக்காரனின் கூட்டாளிகளை […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை […]

Read more