சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. கவி அனுபவம் ‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை ஈடு செய்ய முடிவதில்லை நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை. அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டு பிச்சைக்காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டனின் குரவளையை நெரிக்கும் மௌனம், தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார். “துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more