நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்,  சிவ.விவேகானந்தன்,  காவ்யா பதிப்பகம், பக். 306. விலை  ரூ.300. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம்,  சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600; வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், […]

Read more

பூதங்களின் கதை

பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ. பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), […]

Read more

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more