பசும்பொன் கருவூலம்

பசும்பொன் கருவூலம், தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 300, விலை 300ரூ. நாத்திகம், சுயநலம், பிரிவினை வாதங்களால் தமிழகம் தாழ்ந்து நின்றது. நாசமுற்று தமிழகம் வீழ்ச்சி பெற்றிருந்த நேரத்தில் தேசியமும், தெய்வீகமும் தோற்றுவிடாமல், தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி பெற வைத்தவர் பசும்பொன் முத்துராலிங்கத் தேவர். மேடையேறி சங்கநாதம் செய்தார். தியானம், தொண்டுகள் செய்து பக்திமானாகத் திகழ்ந்தார். களத்தில் எதிர் நின்று வீரனாகப் போராடி சிறை புகுந்தார். பத்திரிகைகளில் முரசு முழங்குவது போல் எழுதியவைகளை ஆவணப்படுத்துகிறது இந்த […]

Read more

உலகப் பெருமக்கள்

உலகப் பெருமக்கள், தொகுப்பும் பதிப்பும் பேரா. சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 300ரூ. “காசு பிள்ளை” என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியபிள்ளை, “கல்விக்கடல்” என்று திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பட்ட தமிழறிஞர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களில், “உலகப்பெருமக்கள்” என்ற இந்த நூலும் ஒன்று. இதில் மகாத்மா காந்தி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷா, செகப்பிரியர்(ஷேக்ஸ்பியர்) உள்பட 15 உலகத் தலைவர்களின் வரலாறுகள் அடங்கியுள்ளன. தூய தமிழ் நடையில் காசு பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். ஆண்டுகள் பல சென்று விட்டபோதிலும், இளமையோடு விளங்குவது இந்த நூலின் […]

Read more

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2, தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 922, விலை 900ரூ. எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகா, திசையன்விளையில் பிறந்தவர். 2006, நவ., 9ல் தன், 86வது வயதில் மறைந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. புனைப்பெயர் வல்லிக்கண்ணன். ராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியும், கிருஷ்ணனின் தமிழ்ப் பெயரான கண்ணனும் சேர்ந்து வல்லிக்கண்ணன் ஆயிற்று. இத்துடன் நையாண்டி பாரதி, சொனாமுனா, சொக்கலிங்கம், கெண்டையன்பிள்ளை, கோரநாதன், மிவாங்கி, வேதாந்தி, பிள்ளையார், […]

Read more