மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 232, விலை 175ரூ. தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக்கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் […]

Read more