பசித்த சிந்தனை
பசித்த சிந்தனை, புவியரசு, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், விலை 120ரூ. பூடக வேடம் பூணாத எதார்த்தம் – எளிமை விலகாத வெளிப்பாடு’ என கவிதை புனையும் கவிஞர் புவியரசு எழுதிய 68 கவிதைகளின் தொகுப்பு. சமூக விமர்சனப் பார்வையை எள்ளலோடு வெளிப்படுத்தும் கோபமான கவிதை மொழியால் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதைகளிவை. யாப்பு மரபைத் திறம்படக் கையாள்பவர் என்பதைச் சொல்லும் கவிதையொன்றும் உள்ளது. ‘எழுதுவதற்கு நீங்கள் ஒன்றும் கொடுப்பதில்லை’ என்று ஒரு கவிதையை தொடங்கியிருக்கும் கவிஞருக்கு, சமூக நிகழ்வுகள் ஏராளமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றன. இவற்றைத் திங்கள் புரொமீதிசுகள், […]
Read more