அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

வெற்றி வாகை

வெற்றி வாகை(உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்), பரமன் பச்சைமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 150ரூ. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல். நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூல். சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரை அருமை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more