காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140 காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. […]

Read more

அம்மை & பதுங்குகுழி நாட்கள்

அம்மை & பதுங்குகுழி நாட்கள், பா.அகிலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.170 ஒரு பக்கத்தில் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும், இன்னொரு பக்கம் திருப்பினால் ‘பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பும் என யாழ்ப்பாணக் கவிஞர் பா.அகிலனின் இரண்டு கவிதைப் பிரதிகளை ஒரே புத்தகமாகத் தலைகீழ் வடிவில் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறது ‘பரிசல்’ பதிப்பகம். இரண்டு பிரதிகள், இரண்டு காலங்கள், இரண்டு அட்டைப்படங்கள், ஒரே புத்தகம்! இந்த வடிவமைப்பு உத்திக்காக ஒரு சபாஷ்! நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140 காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. அந்த […]

Read more

இரண்டு தந்தையர்கள்

இரண்டு தந்தையர்கள், சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம், பரிசல் வெளியீடு, விலை: ரூ.200. மறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று […]

Read more

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்,  தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ, கொரியக் கவிதைகள் உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் […]

Read more

நடைவழிக் குறிப்புகள்

நடைவழிக் குறிப்புகள், சி.மோகன், பரிசல் வெளியீடு, விலை 150ரூ. கவனிக்க மறந்த ஆளுமைகள் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 […]

Read more

உதிர்ந்த இலைகளின் பாடல்

உதிர்ந்த இலைகளின் பாடல், தமிழில் ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150 ரூ. 1999-ல் வெளியான கவிதைகள் என்னும் மொழிபெயர்ப்பு நூலின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். மொழிபெயர்ப்பாளர் தமிழ் இலக்கிய மாணவியாக இருந்தபோது சீன இலக்கியம் எனும் காலாண்டிதழில் வாசித்த சீன கவிதைகளில் மனம் ஒன்றி 42 சீனக் கவிஞர்களின் 87 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சீன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும் தனது மொழிபெயர்ப்பின் வழியாக மிக நெருக்கமாக தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவந்து […]

Read more

திணை – உணர்வும் பொருளும்

திணை – உணர்வும் பொருளும், பிரகாஷ். வெ, பரிசல் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. இந்நூல், அளவில் சிறிதாயினும் ஆழமான ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் இலக்கணத்துள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை வழியிலமைந்த வாழ்வியல் இலக்கணம் உள்ளது. ஐந்திணைகளுக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உட்பிரிவுகள் உண்டு. இவற்றுள் உரிப்பொருள் என்பது அவ்வத்திணைகளுக்குரிய அகப்பொருள் ஒழுக்கம் குறித்து வருவது. அன்பின் ஐந்திணையன்றி கைக்கிளை, பெருந்திணை என இரண்டு உள்ளன. உரிப்பொருள்களை உணர்வுகள் எனக் கொண்டு, தொல்காப்பியர் வழிநின்று […]

Read more

நொச்சி

நொச்சி அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம், பரிசல் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. நொச்சி நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தவிர 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர். தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரப்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங்கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே […]

Read more