எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு, பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 188, விலை 140ரூ. மொத்தம் 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ். போத்தையா, அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார் பா. செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும் படங்களுடன் […]

Read more

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை 180ரூ. அசைபோடும் கதைகள் பா.செ. அவர்களின் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் முதலில் கவனத்துக்கு வருவது சொற்களில் இருக்கும் கச்சிதம். கத்தி போன்ற சொற்கள். ஆனால் அந்த கத்தி மெல்லிய அங்கத சுவையுடன் கதையை சொல்லிக்கொண்டே வேண்டிய இடத்தில் ஆழமாக கீறவும் செய்கிறது. சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சாதீய சிடுக்குகளையும் அதில் மாட்டிக்கொண்டு கிழிந்து தொங்கும் மனித உறவுகளையும் பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. […]

Read more