சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more

சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவீந்திரநாத் தாகூர், சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாதெமி, பக். 288, விலை 175ரூ. மகாகவி தாகூர் மாபெரும் கதாசிரியரும்கூட என்பதை இக்கதைத் தொகுப்பு. உள்ளங்கை நெல்லிக்கனியாய் நமக்கு எடுத்துரைக்கிறது. கவித்துவ வரிகளில் ஒவ்வொரு கதையையும் செதுக்கியிருக்கிறார் தாகூர். மகாகவி பாரதியைப் போன்று அங்கதமும் அறச்சினமும் கதைகளினூடே கொப்புளிக்கிறது. வர்ணனையிலும் சரி, ஆழ்மன ரகசியங்களை அம்பலப்படுத்துவதிலும் சரி அற்புதமான படப்பிடிப்பைப் போன்ற வாக்கியங்கள். இந்தத் தொகுப்பு முழுவதும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் பிரதிபிம்பங்கள். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு […]

Read more