கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more

மூதாய் மரம்

மூதாய் மரம், வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு, விலை 80ரூ. கடல் பழங்குடி வாழ்வின் அடிப்பதைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னை தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய்க் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சு வரை கடலின் மாணவனாக வாழ்கிறான். விழிப்புநிலை தவறவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடுகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

முகம் மாறும் நிலா

முகம் மாறும் நிலா, வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் வெளியீடு, பக். 78, விலை 75ரூ. தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது. கடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் […]

Read more

பழவேற்காடு முதல் நீரோடி வரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை, வறீதையா கான்ஸ்தந்தின், எதிர் வெளியீடு, விலை 130ரூ. என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்துகிடக்கிறது. மறக்க இயாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற்கரை வாழக்கையில் வருடத்தை மீன்வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளை மீன், அயிலை, நெத்திலி, கூனி, இறால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளார்த்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின்போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் […]

Read more