வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more