தென்மொழி
தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற விவரங்களைத் தக்க சான்றுகளுடன் இந்நூலில் விளக்குகிறார் ஆசிரியர்.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.
—-
விக்டரி பிலிம் டைரக்டரி, பி. ஜெகதீசன், பிரைட் மீடியா பப்ளிகேஷன்ஸ், விலை 700ரூ.
சினிமா நடிகர், நடிகைககள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் முகவரிகள், டெலிபோன் எண்கள் அடங்கிய ஆங்கில புத்தகம், நட்சத்திரங்களின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.