தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ.

60 சுவை விருந்து

பராசக்தியின் கா கா கா எள்ற பிரபல பாடல் ஷுட் செய்யும்போது காகங்களே கிடைக்கவில்லை. பிறகு எப்படி சமாளித்தார்கள்? ஏராளமான புறாக்களைப் படித்துக் கறுப்பு வண்ணம் பூசி… தமிழ்திரையுலகில் நாமறியாத பல விவரங்கள் பற்றி 2…3 டாக்டரேட் செய்யுமளவு ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கே.என்.சிவராமன்.

படிக்க ஆரம்பித்தால் சீழே வைக்க முடியவில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்குச் சொல்வோம்தான். ஆனால் இந்த அடேயப்பா ரகப் புத்தகத்தில் உள்ள பிரமிப்பூட்டும் விஷயங்கள்… நாம் ரசித்துப் பார்த்த சினிமாக்களின் பின்னால் இவ்வ்வ்வ்வளவு விஷயங்கள் உள்ளனவா, யம்மாடியோ.

கல்கி பத்திரிகை எப்படிப் பிறந்தது?, புது மணப்பெண்ணான எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏன் ஆண் வேடம் தரிக்கச் சம்மதித்தார்?, எம்.ஜி.ஆரின் தாழம்பூ திரைப்படத்துக்கும் வி.சி.குருநாதனுக்கும் என்ன சம்பந்தம்?, சிவாஜியின் புதிய பறவைக்கும் எனஸ்.ஏ.சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்?ஆபாவாணன் இல்லையேல் இன்றைய கமர்ஷியல் சினிமா இல்லை. எப்படி என்பதை அழகான வார்த்தைகளில் இந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஹிந்தி சினிமாவுக்காக எடுக்கப்பட்ட ஹெலிகாப்டர் சண்டையை அப்படியே காபி பேஸ்ட் செய்து ஏவி.எம்.மின் தூங்காதே தம்பி தூங்காதேயில் இணைத்து அந்த ஒட்டு வேலை தெரியாமல் அழகாக ஸ்க்ரிப்ட் செய்து உதவிய விசுவின் திறமையை என்ன சொல்ல? அட.

‘கர்ணன்’ படத்தில் குருஷேத்திரப் போரில் இடம்பெற்ற அனைவரும் ராணுவவீரர்கள் என்பது போன்ற ஏகப்பட்ட சுவாரஸ்யத் தகவல்கள் உள்ளன இந்நூலில். மொத்தத்தில் சுவாரஸ்யம்.

நன்றி: கல்கி, 21/7/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026393.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.