உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், ஆ.இரா.வேங்கடாசலபதி, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், விலை 600ரூ.

சுவடிகளில் மட்டுமே இருந்த பழங்கால தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சென்று எடுத்து பதிப்பித்து அவற்றுக்கு உயிர் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், 1877 முதல் 1942 வரை தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார்.

ஜி.யு.போப், மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார், சி.தியாகராஜசெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்கள், ஆதுனகர்த்தர்கள் போன்ற பலர் எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை பொக்கிஷமாக சேகரித்து இருந்தார். இவற்றில் 700 கடிதங்கள் முதல் தொகுப்பாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

அந்தக் கால நடப்புகள், தமிழ் உரைநடை வளர்ச்சி, இலக்கிய நயம், ஏட்டுச் சுவடியில் இருந்து அச்சுப் பண்பாட்டுக்கான மாற்றம் நடந்த விதம் போன்ற அரிய பல தகவல்களை இந்த கடிதங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் உரை நடையை படிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

நன்றி: தினத்தந்தி.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027072.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.