உலகம் பிறந்த கதை!
உலகம் பிறந்த கதை!. சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலைரூ.200.
புதிர்களின் உறைவிடம் இந்த பிரபஞ்சம். அறிவியல் இந்த புதிர்களுக்கு விடை தேடி விடுவிக்கிறது. இயற்கையை மிஞ்சிய பேராற்றல் இருக்க முடியாது. இந்த பேராற்றலில் அறிவியல் தேடி கண்டடைந்த தகவல்கள் கொண்ட நுால்.
நுால் மூன்று பெரும் பிரிவாக உள்ளது. முதல் பிரிவு, வான மண்டலம் பற்றியுள்ளது. அடுத்து, புதிர்கள் நிறைந்த பூமி பற்றியதாக உள்ளது. உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது மற்றொரு பிரிவாக உள்ளது.
இந்த பெரும் பிரிவுகளில் துணை தலைப்புகள் வகுக்கப்பட்டு, முறைப்படி தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் அறிவியல் இயக்கத்தை அறிய விரும்புவோருக்கு இந்த நுால் பயன்படும். எளிய நடையில், முறையான தலைப்புகளுடன் உள்ளது. தமிழர்களுக்கான சிறந்த அறிவு நுால்.
– மலர்
நன்றி: தினமலர், 31/10/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031791_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818