வாசலுக்கு வரும் நேசக்கரம்

வாசலுக்கு வரும் நேசக்கரம், முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ.

எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரத்தின் சிந்தனையில் உருவான, 15 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கட்டுரையில் கருத்து சொல்லும் வேளையில், அதனோடு நகைச்சுவையை கலந்து கலகலப்பாக்குவது இவரது பாணி.

அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் சவால்கள், அதற்கான தீர்வுகள், போகிற போக்கில் எளிதாய் எப்படி இவற்றை எதிர்கொள்வது என, எளிமை சொற்களில் தந்திருக்கிறார். தன் கருத்திற்கு கூட்டு சேர்க்க, குட்டி, குட்டி கதைகளையும் கட்டுரைகளில் கலந்து இருக்கிறார்.

ஏராளமான தன்னம்பிக்கை வாசகங்கள், கட்டுரைகள் எங்கும் பரவி கிடக்கின்றன. இளைஞர்கள் வரவேற்கும் நூல்.

-ஜி.வி.ஆர்.,

நன்றி: தினமலர், 25/9/2016.

Leave a Reply

Your email address will not be published.