வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்
வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ.
ஊர் நினைவுகள்
பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.
அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர்.
பால்யமும் சரி, கிராமப்புற வாழ்வும் சரி, விட்டுவந்துவிட்டவர்களுக்கு மிஞ்சுவது நினைவுகள் மட்டும்தான். சமயவேலின் நினைவுகளில் ஊர் மனிதர்கள், திருவிழாக்கள், கண்மாய்கள், பார்வதி அம்மாளின் ஆமை வடை, சாதிச்சான்றிதழ் பெற பட்டபாடு, தலித் தோழரை டீக்கடையில் டீ குடிக்க வைத்து வாங்கிய கல்லடி, நீர் மேலாண்மை என்று ஒரு வாழ்வே ததும்புகிறது. நூலை வாசித்த பின்னர் நம் நினைவுகளில் அது ததும்பத் தொடங்குகிறது.
நன்றி : அந்திமழை, 1/4/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818