அகிலம் வென்ற அட்டிலா
அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ.
உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொண்டு வந்த மாவீரனைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. அன்றைய காலத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிய ரோமானியப் பேரரசர்களை சுவடில்லாமல் அழித்த அட்டிலாவின் அரசியல் யுக்தியை நூலாசிரியர் திறம்பட விவரித்திருக்கிறார். வரலாற்றை விரும்புவர்கள் மட்டுமின்றி, வாழ்வில் ஜெயிக்க விரும்புவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். -நன்றி: தினமணி, 28/4/2014.
—-
எப்படி கதை எழுதுவது, ரா.கி. ரங்கராஜன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 170ரூ.
பத்திரிகைகளுக்கு சிறுகதை எழுதத்துடிப்போருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி. நன்றி: குமுதம், 19/6/2014.