அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், அடையாறு புற்றுநோய் அறக்கட்டளை, பக். 288, விலை 150ரூ.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் கன அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட் லட்சக்கணக்கான புற்று நோயாளிகளின் மறுவாழ்வு இல்லமாகத் திகழும் அதை நிறுவ அவரும் அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் பட்ட கஷ்டங்கள் இதுவரை வெளியுலகிற்குத் தெரியாதவை. அவற்றை விறுவிறுப்பான நாவல்போல் தந்துள்ளார் ராணிமைந்தன். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றமும் வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரு வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. மருத்துவமனை உருவாக உதவிய தலைவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசியல் அதிகாரபீடம், அதை எதிர்த்து நடந்த போராட்டம் என்று ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளார். இன்றைக்கு ஆலமரமாய் பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அம்மருத்துவமனைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் சாந்தா பற்றிய தகவல்கள் பலருக்கு முன்னுதாரணம். புற்றுநோய் ஓர் உயிர்க்கொல்லி, அது வந்தால் பிழைக்க மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்து, அவர்களை அந்த நோயிலிருந்து காத்ததற்குச் சான்றாக, மீண்டு வந்தோரின் நினைவலைகளை ஆதரமாகத் தந்துள்ளது சிறப்பு. நன்றி:  குமுதம், 1/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *