அமுதே மருந்து

கல்விச் செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மகேஸ்வரி பதிப்பகம், 12, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 116. தமிழக முதல்-அமைச்சராக பதவி  வகித்தபோது கல்வி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றினார்.  புதுப் பள்ளிக்கூடங்களை  ஏராளமாகத் திறந்தார். மதிய  உணவுத் திட்டத்தைக் கொண்டு  வந்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின்  வாழ்க்கை வரலாற்றை சுவைபடி  எழுதியுள்ளார். ஈசாந்திமங்கலம்  முருகேசன் இளைய  தலைமுறையினர் அவசியம்  படிக்க வேண்டிய புத்தகம். — கண்ணீரில் மிதக்கும் கதைகள்,  டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமிஞ்சிக்கரை,   சென்னை 29, விலை 80ரூ வரலாற்று நூல்களையும்,  ஆராய்ச்சி நூல்களையும் எழுதி  வரும் தமிழறிஞர் டாக்டர்  க.ப.அறவாணன், அவ்வப்போது சிறுகதைளும் எழுதி வருகிறார்.  அவருடைய சிறுகதைகள், வெறும்  பொழுதுபே¡க்குக்கான கதைகள் அல்ல. நீதியையும், தர்மத்தையும் போதிப்பவை. அவருடைய புதிய சிறுகதைத்  தொகுதி “கண்ணீரில் மிதக்கும்  கதைகள்” இதில் மொத்தம் 27  கதைகள் உள்ளன. தலைப்பைப்  பார்த்தால், எல்லாமே  சோகமயமான கதைகளாக  இருக்குமோ என்று நினைக்கத்  தோன்றும், அப்படி அல்ல.  சோகக் கதைகளுக்கு மட்டுமின்றி, உணர்ச்சி மயமான  கதைகளுக்கும் நெஞ்சை நெகிழ  வைத்து கண்ணீரை வரவழைக்கும்  சக்தி உண்டு. அத்தகைய  கதைகள்தான் இதில் இருப்பவை. உயிரும், உணர்ச்சியும் உடைய  கதாபாத்திரங்களை நம் முன்  நடமாடவிட்டு, கதையுடன் நம்மை  ஒன்றச் செய்வதில் ஆசிரியர் முழு  வெற்றி பெற்றுள்ளார்.  இக்கதைகளை ‘நல்ல கதைகள்’,  ‘சிறந்த கதைகள்’ என்று  கூறுவதைவிட, ‘உயர்ந்த  கதைகள்’ என்று கூறுவது முற்றிலும் பொருந்தும். —  அமுதே மருந்து, டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 290ரூ. இயற்கை மருத்துவத்தில்  மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள  காலக்கட்டம் இது. “உணவே  மருந்து, மருந்தே உணவு” என்ற  முழக்கம், உரத்த குரலில் ஒலிக்கிறது. “அமுதே மருந்து” என்ற தலைப்பில் வெளி வந்துள்ள இந்த நூலில்,  பண்டையத் தமிழரின் உணவுகள்,  ஆரோக்கியமான உணவுகள்,  ஆகியவற்றைத் தயாரிக்கும் விதம், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முதலியவற்றை விளக்கமாகவும், தெளிவாகவும் எழுதியுள்ளார், டாக்டர்  எல். மகாதேவன். — சாந்தனைச்சுற்றி ஏன்  வண்டுகளாக மொய்க்கின்றனர்?, சூ. குழந்தை சாமி, வெளியீடு-காந்தி அமைதி நிறுவனம், ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை ரூ 25 குழந்தைகளுக்கான 50 குட்டிக்  கதைகள் கொண்ட பத்தகம்.  படங்களை மாணவ-மாணவிகளே  வரைந்துள்ளனர்.  குழந்தைகளுக்குப் பரிசளிக்க  ஏற்ற புத்தகம். — நிலவின் வானம், ஜி. ராமு, வெளியீடு-பொன்னெழில் பதிப்பகம், 14, ஏ,வெங்கடசுப்பிரமணியன்  நகர் விரிவு, 5-வது குறுக்குத் தெரு, வளசரவாக்கம், சென்னை -87, விலை 55 ரூ. காதல் நிரந்தரமானது. அதற்கு  அழிவே இல்லை என்பதை  அழகாக சித்தரிக்கும் வகையில்,  ஆசிரியர் ஜி. ராமு கொடுத்து  இருக்கும் இந்த குறுநாவல்  படிக்க சுவாரசியமானது. — யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், கவிஞர். தமிழ்க்குழவி, வெளியீடு யோகி, ராம்சுரத்குமார்  சத்சங்கம் அறக்கட்டளைராம்நகர், பேயோடு, சாந்தபுரம் அஞ்சல், குமரி மாவட்டம் 629201, விலை 40ரூ. விசிறி சாமியார் என்று  அழைக்கப்பட்ட யோகி ராம்  சுரத்குமார் பற்றிய புதிய  தகவல்களுடன் அவரது  போதனைகளைம் எளிமையான  பாடல்கள் வடிவில் தந்து இருக்கிறார் ஆசிரியர் கவிஞர். தமிழ்க்குழவி. நன்றி: தினத்தந்தி, 29-08-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *