அயோத்தி இருண்ட இரவு
அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல்.
ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.
—-
அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம்
உலகெங்கும் உள்ள மத அடிப்படைவாதம் குறித்துப் பேசுகிறது இந்நூல். சிலுவைப்போர், புனிதப் போர் என்றெல்லாம் மதத்தை அடிப்படையாக வைத்து போரும், மனித உரிமை மீறல்களும் நடைபெறுவதை சுட்டிக்காட்டும் இந்நூல் உலகின் மிகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் கிற்ஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்களில் உள்ள அடிப்படைவாதத்தையும் பழமைவாதத்தையும் அவற்றிக்கிடையேயான மோதல்களையும் குறித்து பேசுவதாக இந்நூலை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம் கூறுகிறது.
—-
நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை.
உடல் குறைபாடும் சமூகமும் ஒரு மனிதரின் உடலில் உள்ள ஒரு குறைபாடு அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் துன்பம் தருவதுதான். ஆனால் அது தரும் துன்பத்தைவிட சமூகம் தரும் துன்பமே ஒரு மாற்றுத் திறனாளிக்கு அதிகமான துயர் தரக்கூடியது என்பதை இந்நாவல் பேசுகிறது. 9 வயதில் காது கேளாமல் போய்விட்ட ஒருவனின் வாழ்க்கை குறித்த பதிவே இந்நூல் என உயிர்மை பதிப்பகம் கூறுகிறது. நன்றி: இந்தியடுடே, 29/1/2014.