ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ.

சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக மேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆத்திக நாத்திக சிந்தனைக்கெல்லாம் இடம் தராமல், நடுநிலையோடு இந்த தாண்டவக்கோலம் குறித்து வியப்பு தெரிவிக்கிறார்கள். இது பல ரகசியங்களின் குறியீடு என்கிறார்கள். ஒரு ரகசியம் எழுத்தில் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது தோற்றத்திலும் இருக்கலாம். நிறையவே இருக்கவும் செய்கின்றன. இந்த சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியே அமானுஷ்ய மர்ம நாவலை படைத்திருக்கிறார் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.

Leave a Reply

Your email address will not be published.