இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html

கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம். இந்த நூலில் செம்மொழி நாடகம் மூலம் ஒரு குட்டு வைக்கிறார். அரசியல்வாதிகளுக்கு ஆங்கில நாவல் வாசித்து ஆஹோ ஓஹோ என அலப்பறை செய்வோருக்கு புக்கர் பரிசு பெற்ற ஓயிட் டைகர் என்ற நாவலை கிழி கிழி என கிழித்திருக்கிறார். விடை தேடுவோம் என்ற கட்டுரையில் நாடக இலக்கியத்திற்கும் சமஸ்கிருதம்தான் முன்னோடி என்று உறுதிபடக் கூறி நியாயப்படுத்தியுள்ளதை தமிழர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும். பொதுவாகவே நாடகம் பற்றி இ.பா. கூறியுள்ளவை அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. பயனுள்ள பல யோசனைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். கலை, இலக்கியம், மொழி, சினிமா, அரசியல் என எல்லாம் இந்தத் தொகுப்பில் அலசி, கரைத்து, துவைத்து, காயப்போடப்பட்டுள்ளது. -ஜனகன்.  

—-

 

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, பக். 216, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-7.html

கண்ணபிரான் திவ்ய சரித கதைகள் என்றாலே திகட்டாதது. அதிலும் வேளுக்குடி கிருஷ்ணன் என்னும் தேன் மழை பொழிகிறது என்றால், இனிமை பற்றி சொல்லவும் வேண்டுமா? ஓவியர் மாருதி வரைந்த ஏராளமான வண்ணப் படங்களும், நூல் நெடுக இடம் பெற்றுள்ளன. -பவானி மைந்தன். நன்றி: தினமலர், 18/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *