இயக்குநர் சிகரம் கே.பி.

இயக்குநர் சிகரம் கே.பி., சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

திரை உலகில் வரலாறு படைத்த கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். பாலசந்தர் வாழ்க்கையுடன், அவர் இயக்கிய படங்களின் கதையையும், சிறப்பையும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர் டி.வி. ராதாகிருஷ்ணன். நிறைய படங்கள் இடம் பெற்றிருப்பது, புத்தகத்துக்கு எழிலூட்டுகிறது. பாலசந்தர் பற்றிஅறிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.  

—-

முல்லை மண் மக்கள் இலக்கியம், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

சங்க இலக்கியங்களில் மக்கள் வாழும் இடங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நால்வகையாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் காடும், காடு சார்ந்த நிலமான முல்லை நிலத்தைப் பற்றி ஆராய்ந்து, பயனுள்ள புதிய தகவல்களை இந்த நூலில் கூறுகிறார் முனைவர் வாணி அறிவாளன். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *