யோகாசனமும் மருத்துவப் பயன்களும்
யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ.
நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.
—-
1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள், சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
1001 இரவில் சொல்லப்பட்ட அரபுக் கதைகள், உலகப்புகழ்பெற்றவை. அக்கதைகளை, இளைஞர்களைக் கவரும் விதத்தில் சுவைபட எழுதியுள்ளார் மனோஸ். இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 100ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.