இலட்சியப் பெண்டிர்
இலட்சியப் பெண்டிர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ.
சங்க காலம் முதல் இன்று வரை இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெண்கள் ஏராளம். அது பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலில் கூறுகிறார் தாயம்மாள் அறவாணன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்கள்தான். அதிலும் பெண்கள் 3 சதவீதம் பேர்களே கல்வி கற்றவர்கள். பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்கும் வழக்கம் வெள்ளையர்களின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. கி.பி. 1657ல் ஹென்றிக் பாதிரியார், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக் காயிலில் முதல் பொது தமிழ்ப் பள்ளிக்கூடத்தை தோற்றுவித்தார். சென்ற நூற்றாண்டில் புகழ் பெற்ற பெண் கதாசிரியராகத் திகழ்ந்த வை.மு. கோதை நாயகி அம்மாள், கவிதைகளும் எழுதியுள்ளார். இத்தகைய தகவல்களைத் தெரிவித்துள்ள தாயம்மாள் அறவாணன், சாதனை படைத்த பல பெண்களைப் பற்றி பல தகவல்களைக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/7/2015.