உட்கவர் மனம்
உட்கவர் மனம், தமிழில்-சி.ந.வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html
டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார் இத்தாலிய நாட்டவர், மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சியை நடத்தி வைக்க சென்னைக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆமதாபாத்தில் குழந்தை கல்வி சம்பந்தமான சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் அம்மையார் தம்முடைய தீர்க்க தரிசன ஒளியைக் காட்டுகிறார். குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, கவனித்து, புறநிலைத்தோற்றப் பொருள்களை ஆய்ந்து மதிப்பட்ட காரணத்தால், குழந்தையின் தனிப்பட்ட மனச்சக்திகளை எடுத்துக்காட்டுகிறார். குழந்தைப் பருவம் எல்லாவற்றிலும் செல்வமுடையது. இப்பருவத்தை எந்தெந்த வகைகளில் இயலுமோ, அந்த வகைகளில் கல்வியில் பயன்படுத்த வேண்டும். இந்தப் பருவ வாழக்கை வீணாகுமானால், இதற்கு ஈடு செய்யவே இயலாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார், மரியா மாண்டிச்சோரி. ஆங்கில நூலை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் சி.ந.வைத்தீஸ்வரன். நன்றி: தினத்தந்தி, 2/10/2013.
—-
அவுரங்கசீப்,(நாடகம்), இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-172-1.html
ஷாஜகான், அவுரங்கசீப், தாரா, ஜஹானா, ரோஷனாரா ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டது அவுரங்கசுப் நாடகம். இதனுடன் நந்தன் கதையும் நாடகமாக இந்த நூலில் தொகுத்து இணைக்கப்பட்டுள்ளது. ஔரங்கசீப் சர்வாதிகாரியாகவும், இரக்கமற்றவராகவும் இருந்தாலும் தனிமையே அவருடைய சோகமாக அமைகிறது. இறுக்காட்சியில் சரித்திரத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பது நெஞ்சை தொட வைக்கிறது. பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய இது, அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க நாடகம். இது பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டு பல லட்சம் மாணவர்களாலும் படிக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 2/10/2013.