கண்ணதாசன் பயணங்கள்
கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html
கவியரசர் கண்ணதாசன் அமெரிக்கா ரஷ்யா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்தவர். அந்தப் பயணங்கள் பற்றி பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளாக எழுதி படிப்போரை பரவசப்படுத்திய தருணங்கள் நிறைய உண்டு. தென்றல் இதழில் வெளிவந்த ஈழ நாட்டில் ஈராறு நாட்கள் என்ற பயணக்கட்டுரை பலரது கவனத்தை ஈர்த்தது. மற்றபடி கண்ணதாசன் அலைஓசை, குமுதம் போன்ற இதழ்களில் வெளிவந்த பயணக்கட்டுரைகள் பல்வேறு காரணங்களுக்காக முற்றுப்பெறாமை போய்விட்டன. என்றாலும் வெளிவந்த வரை, அவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். அதில் கண்ணதாசனின் பல சுவையான பயண அனுபவங்களும், சிந்தனைகளும் காலத்தால் அழிக்க முடியாதவை. மாஸ்கோ நகரின் குளிர், மலேசியாவின் பண்பாடு மாறாத தமிழ்ப் பெண்கள், அமெரிக்க மக்களின் உழைப்பு உள்ளிட்ட அத்தனையும் கவியரசர் நடையில் படிக்க படிக்க புது அனுபவங்கள்.
—-
மனதெனும் குரங்கை வெல்லுங்கள், ஆனந்த் பாட்கர், தமிழாக்கம்-வெ.ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ – இசட் ஜாஷ் சேம்பர்ஸ், 7அ.சர் ஃபிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை 1, பக். 288, விலை 199ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-5.html
மாஸ்டர் தி மைண்ட் மன்கி என்ற நூலின் தமிழாக்கம் இது. நம் மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்துகொள்ள உதவும் நூல். குரங்காட்டம் தாவும் நம் மனதை அடக்குவது எப்படி. வெல்வது எப்படி என்பதை படித்தவுடன் புரிந்துகொள்ள முடிகிறது. நம் மனதை நாமே அறியவும் அதை அலைபாய விடாமல் அடக்கவும் கற்றுத் தருகிறது. நம்மை நாமே அறிந்துகொண்டால் சாதனை புரிவது நிச்சயம். சுற்றியுள்ளவர்களையும் சாதனை புரியவைக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறார் நூலாசிரியர். படிக்கப் படிக்க தன்னம்பிக்கையை வளர்க்கிற நூல். நன்றி: குமுதம், 21/8/2013