கர்ணன்
கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ.
பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற கேள்விக் குறிகளை எழுப்பி, நம்மையே பதில் தேட வைக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தை புதிய கண்ணோட்டத்தில் அணுகும் நூல்.
—-
நோய்க்கு நோ சொல்வோம், கல்கி பதிப்பகம், 47 NP, ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, பக். 104, விலை 55ரூ.
எந்த நோயாக இருந்தாலும் அவை வருமுன் காப்பதுதான் நல்லது. வருமுன் காக்க நமக்கு நோய்களைப் பற்றியும் அவற்றை வரவிடாமல் தடுக்கும் முறைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பணியைத்தான் டாக்டர் கணேசன் இந்நூல் வழி நமக்கு வழங்கியுள்ளார். காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எல்லா நோய்களைப் பற்றியும் சொல்கிறார். அவற்றை வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதையும் நூல் முழுக்க விவரித்துள்ளார். நன்றி: குமுதம், 22/1/2014.