சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள்

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 110ரூ.

ஜெயகாந்தன் பற்றிய 100 அரிய தகவல்கள் அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகில் புரட்சிசெய்தவர். அவருடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, உயிரும், உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஜெயகாந்தன் சினிமா உலகத்திலும் தடம் பதித்தவர். உலகப்புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரேயின் சாருலதா, அகில இந்திய ரீதியில் முதல் பரிசு வாங்கியபோது இவருடைய உன்னைப்போல் ஒருவன் மூன்றாம் பரிசு பெற்றது. ஜெயகாந்தன் பற்றிய அரிய தகவல்களை சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள் என்ற இந்த புத்தகத்தில் தொகுத்து தந்திருக்கிறார் சபீதா ஜோசப். அருமையான புத்தகம். சிறுகதை மன்னன் என்ற பட்டம் சுமார் 70 ஆண்டுகளாக புதுமைப்பித்தன் ஒருவரை மட்டுமே குறிப்பிடுகிறது. ஜெயகாதந்தன் சிறு கதைகளுக்கு மட்டுமல்ல, நாவல்களுக்கும் சக்கரவர்த்தி. எனவே இலக்கிய இமயம் என்றோ, நாவல் மன்னன் என்றோ அல்லது வேறு பொருத்தமான பட்டமோ அளிக்கலாமே! நன்றி: தினத்தந்தி, 20/5/2015.  

—-

கணினி பராமரிப்பு, ஜெ. வீரநாதன், பாலஜி கணினி வரைகலைப் பயிலகம், கோயம்புத்தூர், விலை 78ரூ.

கணினி பராமரிப்பு என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் உதவியுடன் அனைத்து பணிகளையும் இருந்த இடத்தில் இருந்தே விரைவாக செய்ய முடிகிறது. கணிணியை எந்த அளவுக்கு பயன்படுத்த தெரிந்து வைத்திருக்கிறோமோ, அதில் சிறிதளவாவது பராமரிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இதனால் தேவையற்ற கால விரயம், டேட்டா இழப்பு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க இயலும். ஆசிரியர் இது குறித்து நமக்கு தேவையான மிக அடிப்படை விஷயங்களை 10 தலைப்புகளில் விளக்கப்படங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *