தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும்
தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்முதாய் பதிப்பகம், சென்னை, சிலம்பு, மேகலை ஆகிய நூல்களின் விலை ஒவ்வொன்றும் 450ரூ.
தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழில் காப்பியம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் முதல் இன்று வரை பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. காப்பியங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தை மையப்படுத்தியே உள்ளன. பண்டைய காலம் முதல் தமிழர்களின் ஒழுக்கங்களையும், பண்பாட்டையும் காப்பியங்கள் பறைசாற்றி வருகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள பண்பாட்டு அசைவுகளை தொகுத்து நூல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள் முனைவர்கள் சு. சதாசிவம், பா. வேலம்மாள், மு. இராஜேந்திரன், க. பூபதி, ஞா. சுஜாதா ஆகியோர். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும், சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
இந்தியப் பாராளுமன்றத்தின் நடைமுறைகளையும், மரபுகளையும் விளக்கி விரிவான முறையில் எழுதப்பட்ட நூல். இதில் ஜனாதிபதி, சபாநாயகர், தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பொறுப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ச. இராசமாணிக்கம். நன்றி: தினத்தந்தி, 27/5/2015