தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21/10, லோகநாதன் நகர், 2ஆம் தெரு, சூளைமேடு, சென்னை 24, பக். 152, விலை 100ரூ.

நஞ்சையும் சரி புஞ்சையும் சரி நம்பி இருப்பது நீரைத்தான். அதை முறைப்படுத்தி வழங்கினாலே இந்நாட்டில் வறுமை இருக்காது. அதற்காகத்தான் கங்கை-காவிரி இணைப்பு. தென்னக நதிகள் இணைப்பு ஆகியவற்றின் அவசியத்தை முன் வைக்கிறார் நூலாசிரியர். வெள்ளத்தாலும் புயலாலும் மக்கள் அடைந்த துன்பங்களையும் அவை வறட்சிக்கு இட்டுச் சென்ற கொடுமைகளையும் விளக்கி அதிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார். மக்களின் உயிர் ஆதாரமான தண்ணீருக்கு பன்னாட்டுக் கம்பெனிகளால் வரப்போகும் ஆபத்தைச் சொல்லி எச்சரிக்கிறார். மொத்தத்தில் நீர்வளத்தை நாட்டின் எல்லா பகுதி மக்களுக்கும் பயன்படச் செய்வதற்கான வழிமுறைகளைக் கொண்ட ஓர் அதி முக்கிய நூல். நன்றி: குமுதம், 25/9/2013  

—-

 

இப்பொழுது, எகார்ட் டோலே, தமிழில்-என். கனகமணி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 256, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-2.html

காலந்தோறும் மனிதர்களை அடிமையாக்கி துன்பத்தின் பிடியில் சிக்க வைத்திருக்கும் மனதின் கட்டுமானங்களை உடைத்து வெளிவர விரும்புவோருக்கு உதவும் நூல் இது. முதலாவதாக, மனிதர்களிடம் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, தவறுகளை தவறென உணர வைக்கிறார். அந்த அறிவு இல்லாத வரை முழுமாற்றத்திற்கு சாத்தியமில்லை என்பது நூலாசிரியரின் வாதம். அடுத்ததாக, மாற்றங்களுக்கான பலன்கள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று கூறாமல் இப்பொழுது இங்கேயே ஏற்படும் என்று கூறி, மனதிலிருந்து விடுதலையடைய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இதுபோன்ற ஆழ்மனதுடனான உங்கள் தேடலைக் கண்டடைய உதவும் அரிய நூல் இது. படிக்கப் படிக்க ஒரு தெளிவு கிடைப்பது உறுதி. நன்றி: குமுதம், 25/9/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *