நாயகன் பாரதி
நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html
மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் எழுதப்பட்டவை. மற்ற 15 கதைகளும் மலர்மன்னன் பல்வேறு முன்னணி இதழ்களில் எழுதிய நல்ல சிறுகதைகள். தரமானவையும்கூட. நாயகன் பாரதி என 11 கதைகளை மட்டும் புத்தகமாக வெளியிட்டிருக்கலாம். அல்லது இதே நூலினை இரு பகுதிகளாக பிரித்து நாயகன் பாரதி, மலர்மன்னன் சிறுகதைகள் என தொகுத்திருக்கலாம். ஒரு திருஷ்டி பொட்டு வைத்துவிடுவது நல்லதுதானே என்று மலர்மன்னன் தன் முன்னுரையில் இதுபற்றிக் குறிப்பிட்டாலும்கூட எல்லாச் சிறுகதைகளுக்கும் தொடக்கத்தில் பாரதியாரின் படத்தை வைத்திருக்கும் பக்க வடிவமைப்பு நியாயமல்ல.
—-
நுகர்வெனும் பெரும்பசி, ராமச்சந்திர குஹா, தமிழில்-போப்பு, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி 2, பக். 320, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-134-1.html
சுற்றுச்சூழல் தொடர்பான இந்நூலை ஓர் ஆய்வுக் கட்டுரை அல்லது பாடத்திட்ட மொழிநடையுடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் ராமச்சந்திர குஹா. தமிழ் மொழிபெயர்ப்பு அதற்கு சளைத்ததல்ல. சிறு உதாரணம்- காட்டுமைச் சிந்தனையில் நமக்கு அதிக ஆர்வமூட்டும் அம்சம் அதன் புரட்சிகர இழை. அதை வேளாண்மியத்திற்கு முந்தைய கட்டம் என்றோ அல்லது அதிதெளிவாக புரதானவியம் என்றோ அழைக்கலாம். வெள்ளை மனிதர்களால் முரட்டுத்தனமாக உலுக்கிச் சிதைக்கப்பட்ட இயற்கையுடன் கூடிய மனித இணக்கத்தையும் ஆதிநிலைக்கு மீட்டெடுக்கும் என்று நம்புகிறது புரதானவியம். இது நமக்கான மொழிநடை என்று கருதுபவர் 320 பக்கங்களையும் படித்து மகிழலாம். பக்கம் 183இல் ரைஜஸ்த்தானில் உள்ள கஞ்சா தேசியப் பூங்காவில் உள்ள… என்பதையும் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். அது கன்னா தேசியப் பூங்கா. (kanha National Park). நன்றி: தினமணி, 6/5/13.