பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ.

அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.  

—-

கிருபானந்தவாரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.

தமது சொற்பொழிவுகள் மூலமாகவும், திருப்பணிகள் மூலமாகவும் இணையற்ற இறைப்பணி செய்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். 1982ம் ஆண்டு முடிய நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து வாரியாரே எழுதிய சுயசரிதை இது. அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *