பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி
பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி, ரத்னாகரன், மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 140ரூ.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணும் ஒரு வேகத்தையும், தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவலாகும். இதனை படிப்பதன் மூலம் பெண்ணின் பெருமையை உணரமுடிவதுடன், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—-
மனத்தில் பதிந்தவர்கள், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
கவிதை உறவு இதழில் மாதம் தோறும் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதற்கு முன்பு 5 தொகுதிகள் வெளியிகி உள்ளன. இது 7வது தொகுதி. இந்த நூலில் ஸ்ரீ அரவிந்தர் அன்னை, முதல்அமைச்சர் ஜெயலலிதா, முனைவர் ம.திருமலை, டாக்டர் வி. சொக்கலிங்கம் உள்பட 19 பேர்களுடன் பழகிய இனிய அனுபவங்களை அவர்களுடைய நற்பண்புகளை அழகாகப் பதிவு செய்துள்ளார். வாழும்போதே வாழ்த்துவோம் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் சாதனையாளர்களை-பண்பாளர்களை-உச்சம் தொட்டவர்களை உச்சி முகர்ந்து இனிய தமிழால் போற்றி இருக்கும்பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—-
ஆப்பிள் பொன்மொழிகள், ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 80ரூ.
உலகப் புகழ் பெற்ற ஆங்கிலப் பொன்மொழிகளை எளிமையான விளக்கங்களுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.பெ.பாபாராஜ். நன்றி: தினத்தந்தி, 18/6/14.