மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html

ஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். 260) என்கிறார். பகவான் ரமணரை ஒரு அன்பர் கேட்டார், சாதுக்கள் ஒரு கை உணவு மட்டுமே உண்டு வாழ்கின்றனரே, இது எப்படி? எனக்கு ஒரு கவளம் உணவு போதவில்லையே? பகலில் மூன்று வேளை சாப்பிடுகிற, நீங்கள் இரவில் எத்தனை வேளை சாப்பிடுகிறீர்கள்? என்று பகவான் கேட்க, இரவில் தூங்கப் போய்விடுகிறோம். சாப்பிடுவதில்லை என்று பதில் சொல்ல, அதுதான் இங்கும் நடக்கிறது. இரவில் அமைதி என்பதால் உணவு தேவைப்படுவதில்லை என, குறைவான உண்பது பற்றிய தகவல் (பக். 181). தெளிவையும், விழிப்பையும் ஏற்படுத்தும் பயனுள்ள கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. நன்றி: தினமலர், 17/3/2013.  

 

கர்ம வீரர் காமராசரின் வரலாறு, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி, பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவை வசன நடையில் எழுதப்பட்டவை. முனைவர் முகிலை எம்.மதுசூதனப் பெருமாள் காமராஜர் வரலாற்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். கவிதைகளை எல்லோரும் புரிந்து ரசிக்கக்கூடிய எளிய நடையில் அதே நேரத்தில் தேன்போல் இனிக்கும் இனிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். எனவே ஒரு குறுங்காவியம் என்று சொல்லத்தக்க அளவில் இந்நூல் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *