மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html

தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, படிக்கப் படிக்க சுவாரசியத்தைத் தருகின்றன. மண்ணும் மனசும் என்ற பகுதியில் காரோட்யின் மனசு, விசுவாசமிக்க அப்பாவின் குடும்பத் தோழர், அக்காவின் பாசமும், மறக்க முடியாத நினைவும், அப்பத்தாவின் சுருக்குப்பை மகிமை, அத்தையின் நேசம், கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகள் என நம்மை அவருடைய உணர்வுகளோடு ஒன்ற வைக்கின்றன. நேரில் பார்ப்பது போன்ற எழுத்து நடை நம்மை ஈர்க்கிறது. நன்றி: தினமணி, 15/9/2013  

—-

 

புன்னகைப் பூக்கள், ஆர்.சியாமளா ரகுநாதன், நம்மொழி பதிப்பகம், 17/9, கென்னடி சதுக்கம் முதன்மைச்சாலை, செம்பியம், சென்னை 11, விலை 50ரூ.

குழந்தைகள் விரும்பும் மிருகங்கள், பறவைகள், மலர்கள் பற்றியும், சுதந்திர போராட்டத்தலைவர்கள், சுற்றுலா, பள்ளி, நூல்நிலையம் பற்றி பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  

—-

 

அறநெறி காட்டும் ஆத்திசூடி கதைகள், டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-576-4.html

ஆத்திச்சூடியில் உள்ள கருத்துக்களைக் கொண்டு மாணவர்களுக்கு எழுதப்பட்ட 42 சிறுகதைகள் அனைத்தும் அறிவுரை கூறும் கதைகள். நன்றி: தினதந்தி, 11/9/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *