மானுடக் குரல்

மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-3.html

தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.  

—-

தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப்பாடல்கள், தொகுப்பு பொன். செல்வமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 334, விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-218-2.html

ஒரு கவிஞரின் பாடல்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுவது சாதாரணப் பணியன்று. கவனக்குறைவால் வேறு கவிஞர்களின் பாடல்கள் இடம் பெறுவது வாடிக்கை. அந்தத் தவறு நடவாமல் தஞ்சை ராமையாதாஸின் திரை இசைப் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இந்நூலின் தொகுப்பாசிரியர். ஒரு பாடலைக் கேட்கும்போது அதை எழுதியவர் யார் என்று அறிந்துகொள்ள இந்நூல்கள் உதவும். நம்மைவிட்டு மறைந்த திரைக் கவிஞர்கள் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் மூலம்தான் இன்றைக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் ஜாலிலோ ஜிம்கானா போன்ற துள்ளலிசைப் பாடல் உள்ளிட்ட பல பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸை இந்நூல் வழி நம்மோடு இன்றைக்கும் பயணிக்கச் செய்திருக்கிறார் தொகுப்பாசிரியர். நன்றி: குமுதம், 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *