மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி
மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி, சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-9.html
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர் என்று பொதுவாக பேச்சு அடிபடுகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விறுவிறுப்பான நாவல்போல் எழுதியுள்ளார் சேவியர். இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று அவர் சபதம் செய்த நிகழ்ச்சி வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வார் என்று பேச்சு அடிப்பட்டதே அது என்ன ஆயிற்று. அவருக்குப் பிடித்தமான விளையாட்டு என்ன, தினமும் உடற்பயிற்சி செய்கிறாரா… என்பது போன்ற விஷயங்களுக்க இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கிறது.
—-
இலக்கியச் சிந்தனையின் ஒற்றைச்சிறகு, தமிழருவி மணியன், வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ.
தமிழ்நாட்டில் வெளிவருகின்றன எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகும் கதைகளைப் படித்து ஆராய்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து பிறகு அந்த 12 கதைகளின் மிகச்சிறந்த கதையை தேர்வு செய்து பரிச வழங்கும் பணியை இலக்கியச் சிந்தனை அமைப்பு செய்து வருகிறது. 2012ம் ஆண்டில் வெளியான 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. அவற்றில் தலைசிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்ட ஒற்றைச் சிறகு கதையை எழுதியவர் தமிழருவி மணியன். நன்றாக உரசிப்பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கதைகள். எனவே ஒரு வைரமாலை போல இப்பத்தகம் ஜொலிக்கிறது நன்றி: தினத்தந்தி, 15/5/2013.