முதற்கனல்
முதற்கனல், ஜெயமோகன், நற்றிணைப் பதிப்பகம், சென்னை, விலை 290ரூ.
இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணம் தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச மகாபாரதம், இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து அமோகமான வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த இரண்டு காவியங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், ராமாயணம் ஓர் உன்னத மனிதனைப் பற்றியது. இதுவே கம்பனில் ஓர் அவதாரம். மகாபாரதம் தொடர்ச்சியாகப் பல்வேறு மனிதர்களின் தர்மசங்கடங்களை விவரிப்பது. நன்றி: குங்குமம், 23/6/2017.
—-
ப்ளாசம்ஸ் இன் இங்லிஷ், டுவேர்ட்ஸ் பெடடர் இங்லிஷ், எம். ராஜாராம், ரூபா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி, விலை 250, & 195ரூ.
ஆங்கில மொழியில் மேலும் புலமை பெற படிக்கவேண்டிய இரு நூல்கள் இவை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள், ஒவ்வொரு சூழலுக்கும் தக்கவாறு எந்த சொல்லை பயன்படுத்துவது, நேரக்கூடிய தவறுகளை எவ்வாறு சரிசெய்வது என விரிவாக விளக்குகின்றன இக்கையேடுகள். நன்றி: இந்தியா டுடே, 25/6/2014.